தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூச்சு திணறல் காரணமாக .மருத்துவமனையில் அனுமதி…!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூச்சு திணறல் காரணமாக .மருத்துவமனையில் அனுமதி.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இந்நிலையில் இவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
கடந்த தேர்தலில் கூட மக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது, கரங்களை மட்டுமே அசைத்து வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், தற்போது இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அதிகாலை 3 மணியளவில், விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.