இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் சன்மானம் – டெல்லி போலீசார்!
கொலை வழக்கில் தேடப்பட்டு வரக்கூடிய இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற மல்யுத்த வீரர் தான் சுஷில்குமார். மே மாதம் ஆறாம் தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் மூத்த வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இளம் மல்யுத்த வீரர்களான குமார், அஜய், பிரின்ஸ், அமிர், சாகர் உள்ளிட்ட 5 வீரர்களுடன் மூத்த வீரரான சுசில்குமார் உள்ளிட்ட சிலர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் படுகாயங்களுடன் சோனு மகால், ஆமித் ஆகிய இரு வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த வாகனங்களை சோதனை செய்ததில் ஏராளமான தடிகள் மற்றும் துப்பாக்கி ஆகியவை கிடைத்துள்ளது. இதனை அடுத்து மூத்த வீரர்கள் சிலர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் இரு முறை தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் குமாரும் ஒருவர். ஆனால், இவர் இந்த சம்பவத்திற்கு பின் தலைமறைவாகி விட்டார்.
தலைமறைவாக உள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார் வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுஷில் குமாருக்கு டெல்லி காவல் நிலையத்தில் இருந்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் சுசில்குமார் குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் தற்போது மல்யுத்த வீரர் சுஷில்குமார் இருப்பிடம் குறித்த தகவலை தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வரக்கூடிய மற்றொரு நபரான அஜய் குறித்தும் தகவல் அளிப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.