நூலிழையில் உயிர் தப்பிய பெண்…! வைரலாகும் வீடியோ..!
டவ்-தே புயல் மும்பையில் பலத்த காற்றுடன் கடக்கும்பொழுது மரம் ஒன்று வேகமாக விழுந்துள்ளது. அப்போது அங்கிருந்த பெண் நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தென்மேற்கு அரபி கடல் பகுதியில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக மாறி இன்று அதிகாலை குஜராத்தில்,சவுராஷ்டிரா கடற்கரையின் டியு மற்றும் உனா இடையே கரையை கடக்க தொடங்கியது.
இதனால் குஜராத், சவுராஷ்டிரா, மும்பை, ராஜஸ்தான், ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. டவ்-தே புயல் தாக்கம் காரணமாக குஜராத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மேற்கு மாநிலங்களிலும் புயலின் தாக்கத்தால் மகாராஷ்டிராவில் 12 பேரும், கர்நாடகாவில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், மும்பையில் கனமழை பெய்து வருகின்ற நிலையில், தண்ணீர் வீட்டிற்குள் சென்று மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் டவ்-தே புயல் மும்பையில் பலத்த காற்றுடன் கடக்கும்பொழுது அங்கிருந்த பெரிய மரத்தின் கீழ் பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த மரம் சரிந்து கீழே விழுவதை பார்த்த அந்த பெண் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
#Mumbai | A woman narrowly escape accident, after a tree came down crashing on a #Vikhroli road during the #Cyclone on Monday.#mumbaicyclone #MumbaiWeather #MumbaiRains #cyclonetaukate #CycloneTauktae #CycloneTauktaeupdate #CycloneAlert #Clouds #Weathercloud #weather pic.twitter.com/1xah9nUyO4
— ???????????????????????????? ???????????????????????? (@Rahemat_99) May 18, 2021