என்னமா இப்படி பண்றீங்களே ? கொஞ்சம் அமைதியா பண்ணுப்பா ! பறந்து வந்த வினோத கடிதம்

Default Image

26 வயதான ஸ்டீபன் கம்மிங்ஹாம், அவரது பக்கத்து  வீட்டுக்காரரிடம் இருந்து வினோதமான கடிதத்தை பெற்றார்.அதில் இது ஒரு நடப்பு கடிதம் ,ஒலி பயணிக்கும் ஒரு கட்டிடத்தில் எச்சரித்ததோடு, இரவில் சத்தத்தைக் குறைக்கும்படி கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்டீபன் கன்னிங்ஹாம் என்ற 26 வயது இளைஞன் தனது பக்கத்துக்கு வீட்டாரிடம் இருந்து ஒரு வினோதமான கடிதத்தை பெற்றுள்ளார். அந்த கடிதத்தை, அவரது அண்டை வீட்டார் ஸ்டீபனின் வீட்டின் கதவின் கீழ் வைத்திருந்துள்ளனர்.

இதனை பெற்றுக் கொண்ட ஸ்டீபன் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், என் அண்டை வீட்டாரிடம் இருந்து, ‘சத்தமில்லாத உடலுறவு முறையை கையாளுமாறு குறிப்பிடப்பட்ட ஒரு கடிதத்தை பெற்று கொண்டேன்’ என பதிவிட்டிருந்தார்.  அண்டை வீட்டார் அனுப்பிய கடிதத்தின் புகைப்படத்தையும் அவர் பகிந்துள்ளார்.

அந்த கடிதத்தில், அன்புள்ள பக்கத்து வீட்டுக்காரரே, இந்த கட்டிடங்களின் சுவர்கள் மெல்லியதாகவும், ஒலி பயணிக்கக்கூடியதாகவும் இருப்பதை உங்களுக்கு நினைவூட்டுவதற்காக உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் ஒரு நட்பு குறிப்பு இது.

நீங்கள் அண்டை வீட்டாரைக் கருத்தில் கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன், உங்கள் நெருக்கமான மற்றும் தனிப்பட்ட தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

எனவே, இரவில் சத்தத்தை குறைக்க முடியுமா? என்று நாங்கள் பணிவுடன் கேட்கிறோம். ஒலி பயணிக்கும் ஒரு கட்டிடத்தில் உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர்  இருப்பதை நினைவில் கொள்க. இதை புரிந்து கொண்டதற்கு நன்றி.’ என எழுதியுள்ளார்.

இது பற்றி ஸ்டீபன் கூறுகையில், நான் நேற்று காலை 8.30 க்கு எழுந்து பார்க்கும்பொழுது ,என் கதவின் கீழ் இந்த கடிதம் இருந்தது.நான் அதைப் படிக்கும்போது சிரித்துக்கொண்டே தரையில் உருண்டுகொண்டிருந்தேன்.

இதை பற்றி ஏன் நண்பர்களிடம் தெரிவிக்கும்பொழுது என் பக்கத்து வீட்டுக்காரருக்கு காதுக்கு பஞ்சு வாங்கிக்கொடுக்க சொன்னார்கள்,ஆனால் அதற்கு யார் என்று தெரியனுமே என்று நகைச்சுவையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ஸ்டீபன்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்