பொதுமக்களின் கோரிக்கை ஏற்று மீண்டும் ‘இ-பதிவில்’ திருமணதிற்கான அனுமதி சேர்ப்பு…!
பொதுமக்களின் கோரிக்கை ஏற்று மீண்டும் ‘இ-பதிவில்’ திருமணதிற்கான அனுமதி சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும்,திருமணம்,முக்கிய உறவினரின் இறப்பு,வேலைவாய்ப்பு,மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும்,பிற மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்ய நேற்று முதல் ‘இ-பதிவு’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால்,அதில் திடீரென்று திருமணத்திற்கான பிரிவு நீக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், திருமணம் என்ற பிரிவை பலர் தவறாகப் பயன்படுத்தி வெளியே சுற்றுகின்றனர்.இதனால்,அதிக அளவில் மக்கள் வெளியே வருவதால் கொரோனா மேலும் பரவ வாய்ப்புள்ளது.எனவேதான்,திருமணம் என்ற பிரிவை ‘இ-பதிவு’ இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்தது.
இந்நிலையில்,பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தமிழக அரசின் ‘இ-பதிவில்’ திருமணம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.