#Breaking : படிப்படியாக குறையும் தொற்று பாதிப்பு…! 2,63,533 பேருக்கு கொரோன தொற்று உறுதி…! 4,329 பேர் உயிரிழப்பு…!
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,63,533 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4, 329 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,63,533 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4, 329 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,52,28,996 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,78,719 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,22,436 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் 3.11 லட்சம், நேற்று 2.81 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு, இன்று 2.63 லட்சமாக குறைந்துள்ளது.