அடுத்த மூன்று மணி நேரத்தில் வலுவிழக்கும் ‘டவ்-தே’ புயல்- இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!
அதிதீவிர புயலான ‘டவ்-தே’ புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில்,சவுராஷ்டிரா கடற்கரையின் டியு மற்றும் உனா இடையே நேற்று இரவு 9 மணியளவில் கரையை கடக்க தொடங்கிய அதிதீவிர ‘டவ்-தே’ புயல் செவ்வாய்க்கிழமை காலை 12 மணியளவில் முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.’டவ்-தே’ புயலுக்கு முன்னர் மாநில அரசு இரண்டு லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது.
இதுகுறித்து,இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,”அதிதீவிரமாக உள்ள ‘டவ்-தே புயல்’ வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதி நோக்கி கடந்து அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் படிப்படியாக வலுவிழந்து தீவிர புயலாக மாறும்”,என்று தெரிவித்துள்ளது.
VERY SEVERE CYCLONIC STORM ‘TAUKTAE’ WOULD MOVE NORTH-NORTHEAST WARDS AND WEAKEN GRADUALLY INTO A CYCLONIC STORM DURING NEXT 03 HOURS.
— India Meteorological Department (@Indiametdept) May 18, 2021
இருப்பினும்,குஜராத்தின் சவுராஷ்டிராவில் நேற்று இரவு ‘டவ்-தே’ புயல் நிலச்சரிவு உட்பட பெரும் அழிவை ஏற்படுத்தியது.அதாவது,கடந்த மூன்று நாட்களில் குஜராத் உட்பட மேற்கு கடற்கரையில் பல மாநிலங்களை இந்த புயல் பாதிபை ஏற்படுத்தியது.மேலும்,இது கேரளா,தமிழ்நாடு,கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கட்டமைப்புகள்,மின் இணைப்புகள் மற்றும் மரங்களை சேதப்படுத்தியது.மகாராஷ்டிராவில், மும்பை ராய்காட்டில் பாதிப்பு ஏற்பட்டது.இதனால்,விமான நிலைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.