IPL 2018:விசில் வீரர் வாட்சன் அதிரடி சதம் !ராஜஸ்தான் அணிக்கு இமாலைய இலக்கு !

Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று புனேவில் நடைபெறும் 17வது ஆட்டத்தில் மோதுகின்றது. தடை முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விவரம்:ராயுடு, எஸ். வாட்சன், எஸ். ரெய்னா, சாம் பில்லிங்க்ஸ், எம்.எஸ். தோனி(கேப்டன்), டி.ஜே. பிராவோ, ஆர்.ஜடேஜா, கரன் சர்மா, டி. சஹார், ஐ தஹிர், தாகூர் ஆகியோர்  இடம் பெற்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:ரஹானே (கேப்டன்),சம்சன்,ஸ்டோக்ஸ்,திரிபாதி,பட்லர்,கெளதம்,கோபால்,லாப்ஹின்,குல்கர்னி,உனத்கட் ,கிளாஸன் ஆகியோர் இடம் பெற்றனர்.

பின்னர் பேட்டிங்கை தொடர்ந்த 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு  204 ரன்கள் அடித்தது. சென்னை  அணியில் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் அருமையாக விளையாடி இந்த ஆண்டு ஐபிஎல்லில் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.பின்னர் அவர் ரன்களில் 106 ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து விளையாடிய  பிராவோ (24),ஜடேஜா (2), ரயுடா(12), ரெய்னா (46),தோனி(5),பில்லிங்க்ஸ் (3)ரன்கள் அடித்தனர்.ராஜஸ்தான் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்