நாரதா ஊழல் வழக்கில் அமைச்சர்கள் கைது.., முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்- மம்தா சவால் ..!

Default Image

நாரதா ஊழல் வழக்கில் மூத்த தலைவர்களை கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இன்று காலை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களானஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி, மதன் மித்ரா, சோவன் சட்டா்ஜி உள்ளிட்ட 4 பேரை சிபிஐ விசாரணைக்கு அளித்திருந்தது. கல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர்களிடம் விசாரணை நடந்தது. 2016-ம் வருடத்தில் நாரதா ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ரகசிய கேமரா மூலம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டனர்.

அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த 4 பேரை விசாரணைக்கு அழைத்து பின்னர் கைது செய்ததாக தகவல் வெளி வந்தவுடன் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா சிபிஐ அலுவலகத்துக்கு நேரடியாக சென்றார்.

அங்கு சென்ற மம்தா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்ந்த மூத்த தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நீங்கள் எப்படி கைது செய்யலாம். மேலும் முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என்று சிபிஐ அதிகாரிகளுக்கு சிபிஐ அலுவலகத்தில் மம்தா பானர்ஜி சவால் விடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்