களத்தில் ஹீரோவாக திகழும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310(TVS Apache RR 310)..!

Default Image

 

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக், கடந்த மாதம் கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ஆர்சி390 பைக்குகளின் விற்பனையை  முந்தி அசத்தி இருக்கிறது. ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் கேடிஎம் பைக்குகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டிசைன், செயல்திறன், விலை என அனைத்திலும் கேடிஎம் பைக்குகள் சிறப்பான தேர்வாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில், கேடிஎம் பைக்குகளைவிட அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் உருவாக்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த புத்தம் புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டிசைனில் மிக அசத்தலாகவும், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

விலையிலும் கேடிஎம் 390 பைக்குகளைவிட குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால், இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முன்பதிவு கணிசமாக உயர்ந்ததால், காத்திருப்பு காலமும் பல மாதங்கள் நீண்டுள்ளது. கடந்த மாதம் கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ஆர்சி390 ஆகிய இரண்டு மாடல்களையும் சேர்த்து 716 பைக்குகள் விற்பனையாகி இருக்கின்றன.

அதேநேரத்தில், கடந்த மாதத்தில் 983 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வலிமையான சர்வீஸ் நெட்வொர்க்கை கேடிஎம் பெற்றிருந்த போதிலும், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் இளைஞர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.

அண்மையில் ரூ.8,000 விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், கேடிஎம் பைக்குகளைவிட விலை குறைவான மாடலாகவே இருக்கிறது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டது.

இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 0- 60 கிமீ வேகத்தை வெறும் 2.93 வினாடிகளில் எட்டிவிடும் திறன் வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

இரண்டு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 17 அங்குல அலாய் சக்கரங்கள், மிச்செலின் டயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.  இந்த பைக்கில் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த பைக்கில் நீளவாக்கிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் ரூ.2.15 லட்சம் முதல் ரூ.2.23 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. தொடர்ந்து கேடிஎம் 390 பைக்குகளைவிட குறைவான விலை மாடலாகவே இருப்பதும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்