மகிழ்ச்சியான செய்தி!கொரோனா தொற்றை குணப்படுத்தும் டி.ஆர்.டி.ஓ(DRDO )வின் பவுடர் வடிவிலான 2 டிஜி மருந்து! இன்று வெளியானது..!
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக டி.ஆர்.டி.ஓ(DRDO )வின் பவுடர் வடிவிலான ‘2 டிஜி’ மருந்தின் முதல் தொகுப்பை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர்.
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் முதல் தொகுப்பை இன்று காலை 10.30 மணிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இணைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டனர்.
இந்த 2-டிஜி மருந்தினை டிஆர்டிஓவின் அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (ஐஎன்எம்ஏஎஸ்) மற்றும் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளது.
இந்த 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் மருந்தானது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.அதுமட்டுமல்லாமல்,துணை ஆக்ஸிஜன் சார்புநிலையை குறைக்கிறது.இதனால்,ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைபடாது என்பதை மருத்துவ சோதனை முடிவுகள் காட்டுகின்றன. அதாவது,இந்த 2-டி.ஜி. மருந்து எடுத்துக்கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் சோதனை செய்ததில் கொரோனா நெகடிவ் என வந்துள்ளது.மேலும்,இந்த பவுடர் வடிவிலான ‘2 டிஜி’ மருந்தினை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.எனவே,கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மருந்து மிகுந்த நன்மை பயக்கும்.