அதிர்ச்சி!!நடிகர்,இயக்குனர்,பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவுக்கு பலி..!

Default Image

நடிகர்,இயக்குனர் மற்றும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்று காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் நடிகராக அருண்ராஜா காமராஜ் அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து, ‘ரெமோ’,’மான் கராத்தே’,பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து,கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ்.தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.மேலும்,நடிப்பு, இயக்கம் தவிர்த்து அருண்ராஜா பாடல்களும் எழுதி வருகிறார்.

அதன்படி ‘தெறி’, ‘காக்கிச் சட்டை’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார்.மேலும் பல்வேறு பாடல்களையும் அருண்ராஜா பாடியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து,அருண்ராஜா தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில்,நடிகர்,இயக்குனர் மற்றும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவிற்கு(வயது 38) கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்து.இதனையடுத்து, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா,சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இதனையடுத்து,இயக்குனர் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜாவின் மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் பலர் கொரோனா தொற்றினால் உயிரிழந்து வரும் சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest