செல்பீக்களால் மிரட்டவரும் ஒப்போ எப்7..!
இன்றைய ஸ்மார்ட்போன் சந்தையில் வேறு எந்தவொரு ஸ்மார்ட்போனில் இல்லாத அளவிலான மெஷின் லெர்னிங் முடிவுகளை, அதாவது இயந்திர கற்றல் திறனை, ஒப்போ எப்7 வெளிப்படுத்துகிறது. உடன் அதன் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு பியூட்டி தொழில்நுட்பம் கொண்ட 25 எம்பி திறன்களை தன்னுள் கொண்டுள்ளது.
சிறப்பான வன்பொருள் அம்சங்கள் மற்றும் அறிவார்ந்த இயந்திர கற்றல் வழிமுறைகளும் கூட ஒப்போ எப்7-ன் சிறப்பம்சங்கள் ஆகும். இருந்தாலும் கூட, ஒப்போ எப்7-ஐ “ட்ரையல்” பார்த்த எவரும், அதன் கேமராத்துறையை புகழாமல் இருக்க முடியாது. சென்சார் HDR தொழில்நுட்பம்.! பெரும்பாலான ஸ்மார்ட்போன் கேமராக்களில் HDR தொழில்நுட்பம் ஆனது வெறுமனே ஒரு பெயருக்காக தான் உள்ளது. உண்மையான HDR தொழில்நுட்பம் ஆனது சவாலான ஒளி நிலைகளில் கூட சிறந்த வண்ணங்களையும், கூடுதல் படத் தகவலையும் கைப்பற்ற உதவும்.
ஒரு சில உயர்-நுட்பமான ஸ்மார்ட்போன்களில் மட்டுமே, இந்த HDR தொழில்நுட்பம் மிகவும் திறமையாக செயல்படுகிறது. ஆனால் இந்த இடத்தில், ஒப்போ எப்7 வேறுபடுகின்றது. இந்த புதிய செல்பீ எக்ஸ்பெர்ட் ஆனது, தொழில்முறை HDR டெக்னலாஜியை முதல் முதலாக அறிமுகப்படுத்திய சோனி 576 சென்சாரை கொண்டுள்ளது. இது வழக்கமான HDR தொழில்நுட்பத்தை விட ஒரு படி மேல் ஆகும்.
இது சென்சார் HDR தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த உதவுகிறது. இந்த பயன்முறையின் கண்ட்ரோல்ட்டு அலகாரிதம் ஆனது செல்பீக்களில் இன்னும் அதிக வண்ணங்களை சேர்க்கிறது. அந்த கூடுதல் நிறமானது, செல்பீயின் லெவலையே மாற்றி அமைக்கிறது. வெறுமனே கேமரா ஆப்பில் உள்ள இந்த விவிட் பயன்முறையை டாப் செய்வதின் வழியாக இதை இயக்கலாம். பின்னர் உங்களின் புகைப்படங்களின் பின்னணி வண்ணங்களை மேம்படுத்துவது, ஆழத்தை அதிகரிப்பது, போன்ற பலவகசாயன வேலைகள் தானாக நிகழும்.
ஆர்டிபிஷியல் பியூட்டி மோட் விவிட் பயன்முறைக்கு அடுத்தபடியாக, ஒப்போ எப்7-ல் இணைக்கப்பெற்றுள்ள ஒரு கேமரா அப்கிரேட்ட பியூட்டிபை தொழில்நுட்ப அம்சம் தான் – ஏஐ பியூட்டி 2.0 மோட் ஆகும். இது ஒருவரி முகத்தின் 296 பேஷியல் ஸ்பாட்ஸ்களை துல்லியமான முறையில் பகுப்பாய்வு செய்து அங்கீகரிக்கும் திறனைப் கொண்டுள்ளது. அதற்கு பக்க பலமாக ஸ்மார்ட்போனின் சக்திவாய்ந்த சோனி கேமரா சென்சார் திகழும்.
ஒப்போ எப்7 ஒரு திறமையான பின்புற கேமராவையும் கொண்டுள்ளது. ஒரு 16 எம்பி ரியர் கேமராவான அது, குறைந்த அளவிலான ஒளி நிலைமைகளில் கூட பிரகாசமான புகைப்படங்களை கைப்பற்ற உதவும் எப் / 1.8 துளையை கொண்டுள்ளது. உடன் பேஸ் டிடெக்ட் ஆட்டோபோகஸ் (PDAF) அம்சத்திற்கும் ஆதரவளிக்கிறது மற்றும் செயற்கை நுண்ணறிவு, சிக்கலான மென்பொருள் வழிமுறைகளின் சக்தியைப் பயன்படுத்துவதின் வாயிலாக உண்டாகும் பொக்கே விளைவையும் உண்டாக்கும் திறனையும் கொண்டுள்ளது,
மென்பொருள் அம்சங்கள் தவிர்த்து, இதன் 16 எம்பி பின்பக்க கேமராவனது, குறைந்த ஒளி கொண்ட இடங்களில் கூட வெளிச்சமான புகைப்படங்களை கைப்பற்ற உதவும் எல்இடி ப்ளாஷ் ஆதரவையும் கொண்டுள்ளது.