#BEAKING:தமிழ்நாடு மின்சார வாரியம் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்..!
தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக தற்போது ராஜேஷ் லக்கானி நியமனம்.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக தற்போது ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி தற்போது தமிழக மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது 100% வாக்குபதிவு என்ற முழக்கத்தையும் அவர் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.