டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லையா..?? புவனேஷ்வர் குமார் பதில்..!!

Default Image

புவனேஷ்வர்குமார் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்று பரவும் தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கடைசியாக கடந்த 2018 ஆண்டி நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடவில்லை, 20 ஓவர்கள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் அனைவரும் தனது சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றுள்ளார்கள். மேலும் வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் டெஸ்ட் அணியில் புவனேஷ்வர் தேர்வு செய்யப்படவில்லை இதனால் ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் புவனேஷ்வர்குமார் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்று செய்திகள் பரவியது. இதற்கான விளக்கத்தை புவனேஷ்வர்குமார் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் ” டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்பாத என்னைப் பற்றி செய்திகள்  வந்துள்ளது இந்திய அணிக்கு நான் தேர்வு செய்யப்படுகிறனோ இல்லையோ எப்போதும் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதற்கு தான் என்னை தயார்படுத்துகிறேன். அதை தொடர்ந்து செய்வேன். யூகத்தின் அடிப்படையில் எதையும் சொல்லாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்