இஸ்ரேலின் ஒரேயொரு ஏவுகணை..காசாவின் 13 மாடி கட்டிடம் தரைமட்டம்..! வைரலாகும் வீடியோ!
இஸ்ரேலின் ஒரேயொரு ஏவுகணை மூலம் காசாவின் 13 மாடி கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
புனித ரமலான் மாதம் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வரும் நிலையில்,கடந்த திங்களன்று பாலஸ்தீனர்களுக்கும்,இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, திங்கள் இரவு காசாவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது.இதில்,ஒன்பது குழந்தைகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து,கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையிலும் காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில்,7 பேர் கொல்லப்பட்டனர்.அதில்,கேரளா மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த செவிலியர் சவுமியா என்பவர் உயிரிழந்துள்ளார்.மேலும்,அதில்,ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து,இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில்,காசா முனைப்பகுதியில் இருக்கும் 13 மாடி கட்டிடம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலால் தரைமட்டமாக்கப்பட்டது.
இந்தக் கட்டிடம்,ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,காசா நகரில் உள்ள மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்தையும் இஸ்ரேல் ராணுவத்தினர் குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்துள்ளனர்.ஆனால்,இதில் குடியிருந்த மக்கள் தாக்குதல் நடத்தப்படுவது அறிந்து முன்னதாகவே வெளியேறியதால் பெருமளவில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,காசா நகரில் உள்ள பிரதானமான 13 மாடி கட்டிடம் இஸ்ரேலின் ஒரேயொரு ஏவுகணை தாக்குதலில் தரைமட்டமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
LATEST: An Israeli airstrike has destroyed a building that housed The Associated Press’ offices in the Gaza Strip, the AP reports.
The airstrike came roughly an hour after the Israeli military ordered people to evacuate the building. More: https://t.co/6cDSESXSNd pic.twitter.com/n2mbA3PlKq
— Bloomberg Quicktake (@Quicktake) May 15, 2021