ஆக்சிஜன் படுக்கை வசதி.., அமைச்சர் மா.சுப்ரமணியன்..!
சேலம் மகளிர் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
சேலம் அரசு மருத்துவமனை, மற்றும் தற்காலிக சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன்,
சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பொருத்தவரை 1081 படுக்கைகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. கொரோனா சிகிச்சையை மையமாக மிகச் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் 776 ஓட்டு வசதியுடன் கூடிய படுக்கைகள் அங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சேலம் மாநகரில் மட்டுமல்லாது சுற்றுப்புறங்களில் இருந்த பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து கொண்டிருப்பதால் இட நெருக்கடி என்பது கூடியிருக்கிறது.
எனவே மீதமிருக்கிற 305 படுக்கைகளையும் ஆக்சிஜன் வசதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 81 படுக்கைகளுடன் சேலம் பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பேரிடர் காலத்தில் சமூக இடைவெளி இன்றி மக்கள் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. தடுப்பூசி போடும் மையம் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மாற்றப்படும் என தெரிவித்தார்.
சேலம் மகளிர் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் கல்லூரி அருகே 100 படுக்கைகள் கொண்ட மேலும் ஒரு சித்த மருத்துவ மையம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.