அதிர்ச்சி!!கொரோனா மூலமாக மூன்றாம் உலகப்போர்!சீனாவின் திட்டம் பற்றி எச்சரித்த சீன வைரலாஜி விஞ்ஞானி..!
கொரோனா மூலமாக மூன்றாம் உலகப்போர் நடத்த சீனா நீண்டகாலமாக திட்டமிட்டுள்ளாதாக சீனாவின் பெண் வைரலாஜி விஞ்ஞானி லீ மெங் யான் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ்களை பயோ ஆயுதமாக பயன்படுத்துவது குறித்து சீன விஞ்ஞானிகள் மற்றும் மக்கள் விடுதலை ராணுவத்தினர்க்கு இடையே பேச்சவார்த்தை நடந்ததாக,அமெரிக்க வெளியுறவுத்துறை ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,கொரோனா வைரஸை செயற்கையாக உருவாக்கி அதன் மூலம் மூன்றாம் உலகப்போர் நடத்த சீனா திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமும் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால்,சீனாவுக்கு எதிரான இந்த இரு நாடுகளின் குற்றச்சாட்டு சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்நிலையில்,அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டினை நிரூபிக்கும் வகையில்,சீனாவின் பெண் வைரலாஜி விஞ்ஞானி லீ மெங் யான் இதுகுறித்து தனியார் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அந்தப் பேட்டியில் லீ கூறியதாவது,”ஆயுதங்களை வைத்து போர் புரிவதற்குப் பதிலாக கொரோனா வைரஸை ஒரு பேராயுதமாக மாற்றி உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்த ‘பயோ வார்’ நடத்துவது குறித்து சீனா நீண்ட காலமாக திட்டம் போட்டு வருகிறது.இந்நிலையில்,தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் இந்த திட்டம் உறுதியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் நான் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மற்றும் தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள ஆவணங்கள் ஆகிய இரண்டிலுமே மரபுசாரா வழியில் உயிரி(பயோ) ஆயுதத்தை சீனா எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி,சீனா பெரும் தொகையை முதலீடு செய்து கொரோனா வைரஸை உருவாக்கி சீன மக்கள் மற்றும் ராணுவப்படை ஆய்வகத்தின் மூலம் இந்த வைரஸ் பரப்பப்பட்டுள்ளது என்று கடந்த ஜனவரி மாதம் யூ-டியூப் மூலம் தெரிவித்திருந்தேன்.
இந்த வைரஸ் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்,ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைத்து அதன்மூலம் அந்நாட்டின் பொருளாதாரத்தை குறைக்க வேண்டும் என்பதுதான். தற்போது,சீனா அதில் வெற்றி பெற்று விட்டது.
இந்த வைரஸை முதலில் சீனா தனது சொந்த நகரமான வுஹான் பகுதியில் சோதித்து பார்த்தது.எனினும்,வைரஸிலிருந்து எப்படி காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று சீனாவுக்கு தெரியும்.
இந்த வைரஸை பரப்புவதற்கு முன்பாகவே சீனா,சர்வதேச அரங்கில் இதுகுறித்து எழும் கேள்விகளுக்கு என்ன பதில் கூற வேண்டும் என்று முன்தயாரிப்பு செய்துள்ளது.மேலும்,ஆவணத்தை வெளியிட்டதன் காரணமாக நான் சீனாவில் இருந்து வெளியேறி வேறு நாட்டில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருகிறேன்.”,என்று தெரிவித்துள்ளார்.