பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்….!
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், சில கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு ஒரு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தற்போது 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், சில கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழகத்தில், தினசரி 32,000-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வந்தாலும், நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகளை, ஐசியு படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் தமிழகம் முழுவதும் மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு உடனடியாக கீழே கூறப்பட்டுள்ள விஷயங்களை செய்து கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
- தமிழகத்திற்கான ஆக்சிஜன் யோகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
- ரெம்டேசிவிர் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும் .
- தமிழகத்திற்கான தடுப்பூசிகள் ஒதுக்கீட்டையும் அதிகரிக்கப்படுத்த வேண்டும்.
என கோரிக்கை விடுத்துள்ளார்.
Honourable Leader of Opposition Thiru. @EPSTamilNadu writes to Honourable Prime Minister Thiru. @narendramodi requesting to increase the supply of #Oxygen #Remdesivir and #vaccine to Tamil Nadu to help the State in its fight against #COVID19. pic.twitter.com/sap1WdfW2d
— AIADMK (@AIADMKOfficial) May 15, 2021