#BREAKING: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது.
- TNPSC செயலராக இருந்த நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம்.
- கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநராக நியமனம்.
- சிப்காட் மேலாண் இயக்குநர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம்
- உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக ஆனந்தகுமார் நியமனம்.
- தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளராக நீரஜ் மிட்டல் நியமனம்.
- பேரிடர் மேலாண்மை இயக்குனராக சுப்பையன் IAS நியமனம்.
- செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குனராக ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனராக பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தொழில்துறை சிறப்பு செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக நிர்வாக இயக்குனர் ராஜாராமன் நியமிக்கப் பட்டுள்ளார்.
- ஊரக நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக கூடுதல் தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு சிறுதொழில் கழக முதன்மைச் செயலாளர் தலைவராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.