எஸ்.வி சேகர் பேச்சு சரியில்லை !என்ன இருந்தாலும் அவர் பேசுனதா ஏத்துக்கிட முடியாது !மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று எஸ்.வி சேகர் கருத்திற்கு பதில் அளித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களை விட மீடியாக்களில் தான் பாலியல் சம்பவங்கள் அதிகம் அரங்கேறுவதாக திருமலை என்பவர் பதிவிட்ட கருத்தை பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதோடு பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் இழிவாக பேசி இருந்தார்.
இதுகுறித்த கேள்விக்கு தற்போது பாஜக கட்சியை சேர்ந்த எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். அதில் ”பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளை சகித்துக் கொண்டு இருக்க மாட்டோம்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏற்கனேவே இவரின் கருத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இதையடுத்து எஸ்.வி சேகர் தன்னுடைய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருந்தார்.
மேலும் தமிழக ஆளுநர் குறித்தும் பேசினார். அதில் ”ஆளுநரை குற்றவாளியாக்க தமிழகத்தில் சதி நடக்கிறது. ஆளுநர் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தேவையில்லாமல் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.