ஹைதராபாத்தில் கொரோனாவை வென்ற 110 வயது முதியவர்!
ஹைதராபாத்தை சேர்ந்த 110 வயது முதியவர் கொரோனாவில் இருந்து மீண்டு, இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், உயிரிழப்பும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இளம் வயதினருக்கு கொரோனா வந்து விட்டாலே அது குறித்த அச்சத்தில் யோசித்து யோசித்து பயந்தே உயிரிழந்து விடுகிறார்கள். ஆனால், ஹைதராபாத்தை சேர்ந்த 110 வயதுடைய முதியவர் தற்பொழுது கொரோனாவிலிருந்து மீண்டு பிறருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளார்.
ராமானந்த தீர்த்த எனும் 110 வயது முதியவர் கடந்த 14-ம் தேதி மருத்துவமனையில் பரிசோதனை செய்த பொழுது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 18 நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. தற்பொழுது இவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்த தனியார் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜாராம் அவர்கள், இன்னும் சில தினங்களில் அவர் சாதாரண படுக்கைக்கு மாற்றப்படுவார் என தெரிவித்துள்ளார்.