அதிக விலையில் வெளிவரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்..!
இந்திய சந்தைக்கான ப்ரீ-ஆர்டரை, நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, அதன் நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன்களின் முன் பதிவுகள் திறந்து விட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும்கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த MWC 2018 நிகழ்வில் அறிவிக்கப்பட்டதும், பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் அதன் உலகளாவிய வெளியீட்டை சந்தித்ததும், தற்போது ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் அதன் இந்திய விற்பனை சந்திக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நோக்கியா 7 பிளஸ் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று (ஏப்ரல் 20-ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. ரூ.25,999/- என்கிற இந்திய விலை நிர்ணயத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் இந்தியா மற்றும் நோக்கியா.காம்.போன்ஸ் தளத்தில் அணுக கிடைக்கிறது. அம்சங்கள் நோக்கியா 7-ன் அம்சங்களை பொறுத்தவரை, ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி, 18:9 திரை விகிதம் கொண்ட 6 இன்ச் முழு எச்டி + காடிஸ்பிளே (1080 x 2160 பிக்சல்கள் தீர்மானம்), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, இரண்டு 12எம்பி டூயல் ரியர் கேமரா (ஒரு எப் / 1.75 துளை + ஒரு டெலிஃபோட்டோ லென்ஸ்), ஒரு 16எம்பி செல்பீ கேமரா, கார்ல் செய்ஸ் ஆப்டிக்ஸ் ஆதரவு, ஓஸோ ஆடியோ தொழில்நுட்பம், 3800mAh பேட்டரி, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.
கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, 6ஜிஇ ரேம் மற்றும்128ஜிபி உள்ளடக்க சேமிப்பு, எப் / 1.75 துளை உடனான ஒரு முதன்மை 12எம்பி + 12எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பு, ஒரு 5எம்பி செல்பீ கேமரா, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட், 3260mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டுள்ளது.