நியூயார்க்கில்103 மில்லியனுக்கு விற்கப்பட்ட பிக்காசோவின் ஓவியம்

Default Image

மிகச் சிறந்த ஓவியரான பிக்காசோ அவர்களின் ஓவியம் நியூயார்க்கில் உள்ள ஏல வீட்டில் 103 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

போப்லா பிக்காசோ என்பவர் எசுப்பானியா நாட்டை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களுக்கு மக்கள் மத்தியில் தனி சிறப்பும் மரியாதையும் உண்டு. 1881ஆம் ஆண்டு பிறந்த இவர் 1973 ஆம் ஆண்டு உயிரிழந்தார். மிகச் சிறந்த ஓவியரான பிக்காசோவின் ஓவியம் தற்பொழுது வரையிலும் பல்வேறு இடங்களில் ஏலங்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 1932 ஆம் ஆண்டில் பிக்காசோ அவர்கள் வரைந்த பெண் உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு ஓவியம் தற்பொழுது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 19 நிமிடம் ஏலத்திற்கு விடப்பட்ட இந்த ஓவியம் 90 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டு, அதன் பின்பு கட்டணங்கள் மற்றும் கமிஷனுடன் சேர்த்து மொத்தம்103.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டு உள்ளதாம்.

பிக்காசோ உயிருடன் இல்லாவிட்டாலும் இவர் வரைந்த ஓவியங்களில் இதுவரை நான்கு ஓவியங்கள் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டுள்ள பெண் ஓவியத்துடன் சேர்த்து ஐந்தாவது ஓவியம் 100 டாலர்களுக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இந்த ஓவியம் ஏற்கனவே லண்டனில் உள்ள ஒரு ஏழை சந்தையில் 28.6 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டதாகவும், தற்பொழுது இது 100 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக விற்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்