ஜியோவை விரட்ட ஏர்டெல்-ன் அதிரடி பிளான்..!

Default Image

 

ஏர்டெல் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியா ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இப்போது அறவித்துள்ள திட்டம் பல்வேறு பயனர்களுக்கு  பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் ரூ.49-கட்டணத் திட்டத்தில் அதிரடி திருத்தம் கொண்டு வந்துள்ளது, அதன்படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.49-க்கு ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஒரு நாள் வேலிடிட்டி கொண்டவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு இதே ரூ.49-திட்டத்தில் 1ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்பட்டது, மேலும் விரைவில் புதிய திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் அறிவித்துள்ள ரூ.65 திட்டத்தில் 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என ஏர்டெல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் ரூ.249/-திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏர்டெல் ரூ.249/- ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.

அடுத்து ரூ.199/- திட்டத்தில் பயனர்களுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் அறிவித்துள்ள இந்த இரண்டு திட்டங்களுமே, நியாயமான விலையில் கனரக டேட்டா பயன்பாட்டை தேடும் பயனர்களுக்கான சிறந்த திட்டங்கள் ஆகும். குறிப்பாக ரூ.249/- ஆனது மிகவும் கவர்ச்சிகரமானதாகும்.

சமீபத்தில், ஏர்டெல் ரூ.499/- அறிமுகமானதும் அது ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு, வரம்பற்ற வாய்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நண்மைகளை மொத்தம் 82 நாட்களுக்கு வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.349/- திட்டமானது தற்போது முந்தைய 70ஜிபி அளவிலான டேட்டாவில் இருந்து 84 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமாக மாறியுள்ளது. இந்த திட்டமும் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் ரூ.349/-ன் இதர நன்மைகளை பொறுத்தவரை, ஜியோ போன்றே ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்