புத்தகம் போதும்… பூங்கொத்து, பொன்னாடைகள் வேண்டாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்.

இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸில் இருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவ கட்டமைப்பு மூலமாகவும், முழு ஊரடங்கு காரணமாக தொற்று பரவாமல் தடுக்க அரசு களப்பணி ஆற்றி வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகளுக்கான கூடுதல் செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள கருணை உள்ளத்துடன் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் நிதி உதவியை வழங்கி வருகின்றார்கள். இதன் பொருட்டு என்னை சந்திக்கவும், வாழ்த்துக்களை தெரிவிக்கவும் வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளை உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.

பொதுவாகவே இவற்றை தவிர்த்து புத்தகங்கள் வழங்குங்கள் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருபவன் என்பதை அனைவரும் அறிவீர்கள். எனவே, பூங்கொத்து, பொன்னாடைகளை உறுதியாக தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், அமைச்சர்கள், உறுப்பினர்களை அவரவர் தொகுதிகளுக்கு சென்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட கேட்டுக்கொண்டுள்ளேன்.

இவ்வாறு சென்ற அமைச்சர்கள், எம்எல்ஏகளுக்கு வரவேற்பு தரப்பட்டதாக செய்திகள் வருகின்றன. தொற்று காலத்தில் இதுபோன்று வரவேற்பை முற்றிலுமாக தவிற்க வேண்டும். வரவேற்பு வளைவுகள், பதாகைகள் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றும் பொறுப்பில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். நாம் நாப்பது செயல்களின் மூலமாக மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடிப்போம் என்றும் சாதனைகள் மூலமாக மக்களின் அன்பை பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்