விண்வெளி நிலையத்தின் முதல் 360 டிகிரி, விர்ச்சுவல் 3டி வீடியோவை வெளியிட்டுள்ளது நேஷனல் ஜி நிறுவனம்..
நேஷனல் ஜி நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் படம் பிடிக்கப்பட்ட முதல் 360 டிகிரி, விர்ச்சுவல் 3டி வீடியோவை வெளியிட்டுள்ளது.
விண்வெளி ஆய்வுக்காக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேசில், இத்தாலி உள்ளிட்ட நாடுகள், விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளது. நிலத்திலிருந்து சுமார் 360 கிமீ உயரத்துக் அப்பால், பூமியை சுற்றிக் கொண்டிருக்கும், இந்த ஆய்வு மையத்தை இயக்கவும், பழுது பார்க்கவும் கால அடிப்படையில் இரண்டு விண்வெளி வீரர்கள் இருக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான உணவுகள், உபகரணங்கள், வானுர்தி மூலம் பூமியில் இருந்து அனுப்பப்படும்.
இந்நிலையில், நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனமும், ஹியூமன் டெக்னாலாஜிஸ் நிறுவனமும் இணைந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை 360 டிகிரி – விர்ச்சுவல் 3டி காமிராவைக் கொண்டு படம் பிடித்துள்ளனர். One Strange Rock என்று ஒளிப்பரப்படும் டாக்குமென்ட்ரி நிகழ்ச்சிக்காக இந்த வீடியோ, திரைப்பட தயாரிப்பாளர்களோடு இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இது விண்வெளி ஆய்வு மையத்தில் எடுக்கப்பட்ட உலகின் முதல் 360 டிகிரி, 6K பிச்ல், விர்ச்சுவல் 3டி வீடியோவாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் இந்த அபார முயற்சிக்கு அரசு தரப்பில் எந்த வித உதவிகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.