வழிகாட்டு நெறிமுறையில் ஈஷா படம்.., சு.வெங்கடேசன் கண்டனம்..!
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்ட நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளது. வன்மையான கண்டனம். உடனே மாற்று என சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கொரோனா முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை வெளியிட்டது. இதில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள விமான நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டப்பட்டது.
தமிழகத்திற்கு வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில் கோவை ஈஷா யோகா மையத்தின் யோகி சிலை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளது இந்திய விமான நிலையங்கள் ஆணையம். @AAI_Official
வன்மையான கண்டனம்.
உடனே மாற்று. https://t.co/jgca0XRhD2 pic.twitter.com/R2C5CElfrb— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 13, 2021
இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளது. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வன்மையான கண்டனம். உடனே மாற்று என பதிவிட்டுள்ளார்.