யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம் – துணை சபாநாயகர் வேண்டுகோள்!
கொரோனா காலத்தில் யாரும் என்னை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று துணை சபாநாயகர் பிச்சாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டிற்குள் இருந்து கொரோனா பரவலை தடுக்க உதவிட எவ்விடனும் என்றும் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் யாரும் என்னை சந்திக்க வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இந்த பேரிட்ட்ற காலம் முடிந்தவுடன் நானே உங்களை நேரில் வந்து சந்தித்து உங்களுடைய வாழ்த்து பெற்றுக்கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையில் கணிசமான உயிரிசேதம் ஏற்படுவதை நாம் அறிவோம். உங்கள் ஒவ்வொருவரின் உயிரும் உங்கள் குடும்பத்துக்கு முக்கியமானது. இந்த உணர்வை மனதில் வைத்துக்கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்பான வேண்டுகோள்.! pic.twitter.com/bZax6VS9NU
— Pitchandi K (@PitchandiK) May 13, 2021