மதுரையில் 124கிலோ கஞ்சா பறிமுதல்!
மதுரை:மதுரை முடக்குசாலை பகுதியில் மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தும்படி கூறினர்.அப்போது காரில் வந்தவர்கள், காரை நிறுத்தி விட்டு ஓடிவிட்டனர்.பின்னர் காரை கைப்பற்றி போலீசார் அதிலிருந்த 124 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சத்து 40 ஆயிரமாகும்.
இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டம் வார்தன்னாபட் பகுதியை சேர்ந்த ராஜூ என்ற மகேந்திர பனோத், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கஞ்சரா பாலா பகுதியைச் சேர்ந்த நரசிம்மராவ் ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.