இன்னும் 2 நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வருகை!!
இன்னும் 2 நாட்களில் மேலும் 13 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வர உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு ஏற்கனவே மே 9ம் தேதி 3 லட்சம் தடுப்பூசிகள் வந்த நிலையில், இன்னும் 2 நாட்களில் 11.4 லட்சம் கோவிஷீல்டு, 1.6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் என மொத்தம் 13 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளது. தற்போது தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி தட்டுபாடு காரணமாக அந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தமிழகத்தில் விரைவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் தொடங்கும் என எதிரிபார்க்கப்படுகிறது.
தடுப்பூசிகளுக்கான கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும், உலகளாவிய அளவில் தடுப்பூசி வழங்களுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், அடுத்த 2 நாட்களில் 13 லட்சம் தடுப்பூசிகள் தமிழக வரவுள்ளது.
இதனிடையே, மேற்கு வங்கம் துர்காபூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாளை காலை அல்லது மதியம் சென்னை வந்தடையும் என மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டையார்பேட்டை வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.