பிரபாஸை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆரை இயக்கும் கே.ஜி.எப். இயக்குனர்..!!
இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கேஜிஎஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் தற்போது நடிகர் பிரபாஸ் வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிகாசன் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தெடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக எந்த நடிகைரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்று சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது.
அந்த வகையில், தற்போது அதற்கான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளாராம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.