போலி அனுமதிசீட்டுகளுடன் மணல் கடத்தி வந்தது லாரிகள் பறிமுதல்..,
திருமங்கலம்:வருவாய்த்துறையினருக்கு திருமங்கலம் வழியாக தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு விமானநிலையம் ரோடு, கரிசல்பட்டி விலக்கு, ராஜபாளையம் ரோடு, கப்பலுார் டோல்கேட், சோழவந்தான் ரோடு ஆகிய பகுதிகளில் தாசில்தார் நாகரத்தினம், முதுநிலைவருவாய் உதவியாளர் மயிலேறிநாதன், வருவாய் ஆய்வாளர்கள் சசிகுமார், முருகன் அடங்கிய குழுவினர் வாகனத் தணிக்கை செய்தனர். அப்போது திருச்சியிலிருந்து மணல் அள்ளி வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் 9 லாரிகளில் போலி அனுமதிசீட்டுகளுடன் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.இதனை அடுத்து அனைத்து லாரிகளையும் தாசில்தார் பறிமுதல் செய்தார்.பின்னர் அவற்றை தாலுகா அலுவலகத்திற்குக் கொண்டு செல்ல ஆணையிட்டார்.