கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து…! 3 பேர் பலி…!
கடலூர் சிப்காட் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து.
கடலூர் சிப்காட் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள நிலையில், படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண்கள் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த உறவினர்கள் கூறுகையில், இந்த விபத்துக்கு நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ரசாயன கசிவு காரணமாக அப்பகுதியில், பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.