#Breaking: நாளை சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் – தமிழக அரசு அழைப்பு
நாளை சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட கட்சிகளை சார்ந்த சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்களை கொண்டு இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.