பொலிவுபடுத்தப்பட்டு வரும் நெல்லை அறிவியல் மையம் ..,

Default Image

நெல்லை:நெல்லையில் அறிவியல் மையம் மாணவ, மாணவிகள் சிந்தையை துண்டும் வகையில்  பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.நெல்லை மாவட்ட அறிவியல் மையம் இந்தியாவில் முக்கிய அறிவியல் மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. 3டி டிஜிட்டல் தியேட்டர், பிளானிக் அவுட்டேரியம், டைனோசரசர் பூங்கா, அறிவியல் மாதிரி அரங்கம், மற்றும் இணையதள வசதியுடன் கூடிய உபகரண அரங்குகள் போன்றவை  இடம் பெற்றுள்ளன. இங்கு அறிவியல் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.  கோடை காலத்தில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வானில் நிகழும் அரிய நிகழ்ச்சிகளை பார்க்க வசதியாக நவீன டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அறிவியல் மையத்தில் தற்போது மேலும் பல புதிய உபகரணங்கள் அமைக்க ஏற்பாடுகள் தீவிரமாiக நடந்து வருகிறது. அங்கு ஏற்கனவே இருந்த பழைய அறிவியல் மாதிரிகள் அகற்றப்பட்டு தரைதளம் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்