கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகர் அல்லு அர்ஜுன்..!!
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் “15 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு பரிசோதித்ததில் எனக்கு நெகட்டிவ் என வந்தது. எனது ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவரது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
Meeting family after testing negative and 15 days of quarantine. Missed the kids soo much ???? pic.twitter.com/ubrBGI2mER
— Allu Arjun (@alluarjun) May 12, 2021