ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம் !இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு !பீதியான மக்கள்
இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெர்லின் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக, செண்ட்ரல் ரயில் நிலையம், அமைச்சகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் விமானங்கள் பறக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
கடந்த 1939ஆம் ஆண்டு முதல், 1945ஆம் ஆண்டு வரை நடந்த உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட பல குண்டுகள், ஜெர்மனியில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.