#Breaking: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 3ம் தேதி நடத்துவதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. ஏற்கனவே, பள்ளிக்கல்வித்துறை 12ம் வகுப்பு தேர்வு எப்போது நடைபெறும் என்பதை 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், புதிதாக பொறுப்பேற்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்களின் நலன் முக்கியம் என்பதால் அனைத்து தரப்பிலும் ஆலோசனை செய்து நடவடிக்கை அதற்கான எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனை முடிந்த பின் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.