மக்கள் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் – கெவின் பீட்டர்சன் ட்வீட்..!!
தயவுசெய்து மக்கள் பாதுகாப்பாக இருங்கள். இந்த நேரம் கடக்கும் ஆனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள். கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் அனைவரும் தனது சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றனர்.
மேலும் பல சினிமா பிரபலங்கள் , கிரிக்கெட் வீரர்கள் தங்களால் முடிந்த உதவியை இந்தியாவின் மருத்துவ உதவிக்கு கொடுத்து வருகிறார்கள். மேலும் சிலர் அறிவுரை கூறிவருகின்றார்கள். அந்த வகையில் தென்னாபிரிக்கா அணியின் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தனது அறிவுரையை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் ” நான் இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கலாம், ஆனால் எனக்கு நிறைய அன்பையும் பாசத்தையும் கொடுத்த நம் இந்திய நாட்டைப் பற்றி நான் இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். தயவுசெய்து மக்கள் பாதுகாப்பாக இருங்கள். இந்த கடினமான சூழ்நிலை கண்டிப்பாக கடக்கும் ஆனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
मैंने भारत छोड़ दिया हो सकता है, लेकिन मैं अभी भी ऐसे देश के बारे में सोच रहा हूँ जिसने मुझे बहुत प्यार और स्नेह दिया है। कृपया लोग सुरक्षित रहें। यह समय बीत जाएगा लेकिन आपको सावधान रहना होगा। ????????
— Kevin Pietersen???? (@KP24) May 11, 2021