மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ் உரிமையாளருக்கு மாரடைப்பு..!ஐசியூ பிரிவில் அனுமதி..!
தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளி மாரடைப்பு காரணமாக,ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் முரளி ராமசாமி மாரடைப்பு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புகழ்பெற்ற தயாரிப்பாளர் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்த பிரபல இயக்குநர் ராம நாராயணனின் மகனான முரளி,தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு தேனாண்டாள் நிறுவனத்தின் மூலம் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றார்.
அந்த வரிசையில்,கடந்த 2017-ஆம் ஆண்டு முரளி தனது மனைவி ஹேமா ருக்மணியுடன் சேர்ந்து தளபதி விஜய் நடித்து அட்லீ இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘மெர்சல்’ படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் முரளி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில்,முரளி தற்போது மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இருப்பினும்,முரளி ஓரிரு நாட்களில் குணமாகி விடுவார் என்று மருத்துவமனையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும், சமீபத்தில் நிகழ்ந்த நடிகர் விவேக்கின் மரணம்,நேற்று இறந்த நடிகர் நெல்லை சிவா மற்றும் இன்று மாரடைப்பு காரணமாக இறந்த மாறன் ஆகியோரின் இழப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால்,தயாரிப்பாளர் முரளி விரைவில் நலம் பெற வேண்டும் என்று திரைப்பிரபலங்கள்தங்கள் வாழ்த்துகளையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகிறார்கள்.