ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு – கே.எஸ் அழகிரி விமர்சனம்

Default Image

ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி விமர்சனம்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்றைக்குத் தடுப்பூசி போடும் அளவு ஒரு நாளைக்கு 17 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதே நிலை நீடித்தால் 94 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 1,000 நாட்களாகிவிடும். அதாவது, 3 ஆண்டுகள் ஆகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான நாடுகள் தடுப்பூசியை இலவசமாகப் போடுகின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் தனியார் பலன் பெறும் நோக்கில் மத்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றசாட்டியுள்ளார். 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ரூ.700 முதல் 1,500 வரை தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக நிர்ணயித்துள்ளன.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட இது 6 மடங்கு அதிகம். ஆகையால், ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்