கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் கேரளாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய 1000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள அரசின் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் டி என் சுரேஷ் அவர்கள் கூறுகையில், நாளுக்கு நாள் மாநிலத்தில்கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், தற்போது வரை 4.5 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் அதிகபட்சமாக சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த பத்து நாளில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு தொற்று பரவியுள்ளதால் பாதிப்பு 7.56 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 5,978 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.