#BREAKING: ரஷ்யாவில் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு.., 9 பேர் உயிரிழப்பு..!

மத்திய ரஷ்ய நகரமான கசானில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தாக்குதலில் 8 பள்ளி மாணவர்களும், ஒரு ஆசிரியரும் கொல்லப்பட்டனர்.
மத்திய ரஷ்ய நகரமான கசானில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எட்டு மாணவர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் 8 பள்ளி மாணவர்களும், ஒரு ஆசிரியரும் கொல்லப்பட்டனர் என்று இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. மேலும் 10 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்டுகிறது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள் மூலம் பள்ளி கட்டிடத்திற்கு வெளியே தீயணைப்பு வாகனங்களும், அருகிலுள்ள தெருக்களில் பொலிஸ் வாகனங்களுடன், மக்கள் கட்டிடத்தை நோக்கி ஓடுவதைக் காட்டியது. பிற வீடியோக்கள் உடைந்த ஜன்னல்களை வெளியே குப்பைகளுடன் இருப்பதை காட்டினர்.
சில மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், மற்றவர்கள் இன்னும் கட்டிடத்தில் இருந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கசானில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அடையாளம் தெரியாத இரண்டு நபரில் ஒருவர் 17 வயது மாணவர் எனவும் 17 வயது மாணவரை கைது செய்ததாகவும், மற்றோருவர் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருப்பதாக இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ரஷ்யாவில் சமீபத்திய ஆண்டுகளில் பள்ளிகள் மீது பல வன்முறைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அவை பெரும்பாலும் மாணவர்களால் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
April 11, 2025