அயோத்தி: இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் கிராமத்தில் முஸ்லிம் வேட்பாளர் வெற்றி..!

Default Image

அயோத்தியில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் கிராமம் ஒன்றில் பஞ்சாயத்து தேர்தலில் ஒரு முஸ்லீம் வேட்பாளர்  கிராமத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அயோத்தியில் உள்ள ராஜன்பூர் கிராமத்தில் வசிப்பவர் ஹபீஸ் அஸிமுதீன் கானை கிராமத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த கிராமத்தில் இந்துகள் அதிகம் கிராமத்தில் உள்ள ஒரே முஸ்லீம் குடும்பம் ஹபீஸ் அஸீமின் குடும்பம் தான். கிராமத்தலைவருக்கான இந்த தேர்தல் போட்டியில் மொத்தம் 8 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில், முஸ்லிம் வேட்பாளர் என்றால் அது ஹபீஸ் தான்.

போட்டியில் இந்து வேட்பாளர்கள் ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அவாஸ் யோஜனாவின் கீழ் வீடு மற்றும் நிலம் ஒதுக்கீடு (பட்டா) ஆகியவற்றின் மூலம் தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்தனர். ஆனால் கிராமவாசிகள் ஹபீஸ் அசிமுதீனுக்கு வாக்களித்து மற்ற வேட்பாளர்களை நிராகரித்தனர். தற்போது பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற அசிமுதீன் பற்றிய பேச்சு தான் நகரத்தின் பேச்சாக மாறியுள்ளது.

இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்து வெற்றி பெற்ற ஹபீஸ் அஸிமுதீன் கூறுகையில், “எனது வெற்றி ராஜன்பூர் கிராமத்தில் மட்டுமல்ல, முழு அயோத்தியிலும் இந்து-முஸ்லீம் உறவுக்கு ஒரு எடுத்துக்காட்டு. அஜீமுதீன் கிராமத்திற்கான முன்னுரிமைகளை பற்றி பட்டியலிட்டு கூறியுள்ளார். அனைத்து நிதிகளும் கிராமத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Weather - Hemant Soren
Delta Weatherman Update
NTK Leader Seeman - Actor Rajiikanth
Priyanka Gandhi
[File Image]
hemant soren udhayanidhi stalin
madurai - bridge