ஏப்ரல் மாதத்தின் ஐசிசியின் சிறந்த வீரராக பாபர் அசாம் தேர்வு.!!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணமாக, ஏப்ரல் மாதத்துக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்கா – பாகிஸ்தான் அணிக்கு இடையே நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அசாம் 82 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். இதனால் ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 865 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார்.
இந்த நிலையில், 2021 எப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டனும், ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவருமான பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025