ஆந்திராவில் 5 நிமிடம் தாமதமாகிய ஆக்சிஜன் சப்ளை – உயிரிழந்த 11 கொரோனா நோயாளிகள்!

Default Image

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் 5 நிமிடம் ஆக்சிஜன் சப்ளை செய்வதற்கு தாமதமானதால் ஐசியூவில் இருந்த 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனாவால் இறப்பவர்களை விட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் முறையாக கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் நேற்று ஆக்சிஜன் சப்ளை செய்வதற்கு 5 நிமிடம் தாமதமாகி உள்ளது. இந்த ஐந்து நிமிட தாமதத்தில் ஐசியூவில் இருந்த கொரோனா நோயாளிகள் 11 பேர் மூச்சுத்தணறி உயிரிழந்துள்ளனர். இது குறித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்