திருவள்ளூரில் சுட்டெரிக்கும் வெயில்!வெளியே வர பொதுமக்கள் அச்சம் !
கோடை வெயில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொளுத்தி வருகிறது.
பகல் முழுவதுமே தகிக்கும் வெயிலால் வீட்டை விட்டு வெளியில் வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் சாலையில் கானல் நீர் தோன்றுவதைக் காணமுடிகிறது. திருத்தணியில் கடந்த சில தினங்களாகவே 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில் இன்று 101.66 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.