செயலாளர் ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி அளிக்கிறது – உயர்நீதிமன்றம் ..!
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை மாற்றாது திருப்தி அளிக்கிறது என தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு தெரிவித்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிக்சை குறித்து தாமாக முன்வந்தது சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது
அப்போது, புதிய அரசு பல்வேறு உயர் அதிகாரி இடமாற்றம் செய்தாலும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை மாற்றாது திருப்தி அளிக்கிறது என தெரிவித்தனர். சுகாதாரத்துறை செயலாளரை மாற்றாமல் கொரோனா தடுப்பு பணிகளை அரசு மேற்கொள்கிறது என தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.