டி 20 உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கும் லசித் மலிங்கா..!!

டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா விளையாட வைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அக்டோபர் மாதம்  டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதற்காக அணைத்து அணிகளும் தயாராகி வருகிறது. இந்நிலையில், இலங்கை அணியின் யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும் லசித் மலிங்கா மீண்டும் டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வேக பந்து வீச்சாளர் லசித் மலிங்கா சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 போட்டியில் மேற்கு வங்கம் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதனை தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் எந்த போட்டிகளும் விளையாடவில்லை.

இந்த நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை போட்டியில் லசித் மலிங்காவை விளையாடவைக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அணியின் கிரிக்கெட் வாரிய தலைவர் விக்ரமசிங்கே கூறியது ” நாங்கள் விரைவில் லசித் மலிங்காவுடன்  பேசுவோம். அக்டோபரில் வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பை உட்பட வரவிருக்கும் டி 20 சுற்றுப்பயணங்களுக்கான எங்கள் திட்டங்களில் அவர் இருக்கிறார்.

லசித் மலிங்கா நம் நாட்டின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர்  என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது. அவரது சாதனைகள் அனைத்தும் இப்பொது பேசப்படுகின்றது. இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு இரண்டு பின்-பின்-டி 20 உலகக் கோப்பைகள் வர உள்ளன அடுத்த இரண்டு நாட்களில் அவரைச் சந்திக்கும் போது அவருடன் எங்கள் திட்டங்களைப் பற்றி பேசப்போகிறோம்”. என்று கூறியுள்ளார்.

இதற்கு லசித் மலிங்கா பதில் கூறியது ‘ “நான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன், ஆனால் டி 20 போட்டிகளில் இருந்து அல்ல. என்னைப் போன்ற ஒரு மூத்த வீரரின் சேவைகளை தேர்வுக் குழு எவ்வாறு பெறப்போகிறது என்பதையும் அறிய மிகவும் ஆர்வமாக உள்ளேன். எனது கிரிக்கெட்  வாழ்க்கையில், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் திரும்பி வந்து என் நாட்டிற்காக சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நான் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.